யாழில் கடற்படைச் சிப்பாய் ஒருவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து கடற்படைச் சிப்பாயின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கண்டியைச் சேர்ந்த சன்னி அப்புக்கே சுரங்க ரொஷாந்த சில்வா (வயது 34) எனும் சிப்பாய்யே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக தெல்லிப்பளை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.