அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவுள்ள ஹரின்.

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான சமூக இயக்கத்தில் இணைந்து கொள்ளத் தயார் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நிலைமையை கருத்திற் கொண்டு தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்து கரு ஜயசூரிய தலைமையிலான தேசிய இயக்கத்தில் இணைந்து கொள்ளத் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கரு ஜயசூரிய மற்றும் விக்டர் ஐவன் ஆகியோர் முன்வைத்த யோசனைகள் மிகச் சிறந்த கருத்தாகும் என நம்புவதாகவும் அதனை அண்மையில் வந்து முன்வைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
தனது அரசியல் விவகாரங்களை விட்டுவிட்டு அதில் இணையவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டெய்லி மிரர் நாளிதழுடனான கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.