தேசபந்துவின் உத்தரவுக்கு பணியாத சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்: சட்டமா அதிபரை சந்தித்து புகார்
கொழும்பில் நேற்று (02) எதிர்கட்சி அரசியல் கட்சிகள் மற்றும் ஏனைய அமைப்புக்கள் நடத்திய போராட்டத்தை ஒடுக்குவது தொடர்பாக மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் வழங்கியதாக கூறப்படும் சட்டவிரோத உத்தரவை அமுல்படுத்த மாகாணத்தின் 5 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் மறுத்துள்ளனர். நேற்று (புதன்கிழமை 02) சட்டமா அதிபர் சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்தன.
நேற்று (02) மாலை நடத்தப்படவிருந்த இந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறானதொரு சூழ்நிலையில் அவர்கள் தனிப்பட்ட ரீதியில் சட்டரீதியான சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த போராட்டத்தை ஒடுக்க உத்தரவுகளை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டாலும், அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அதிகாரிகள், தற்போதுள்ள சட்ட நிலவரத்தின் அடிப்படையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கூறியதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், இந்த சிரேஷ்ட அதிகாரிகள் நேற்று சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்னத்திடம் ஒரு சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, இந்நிலைமையில் உருவாக்கப்படக்கூடிய பின்னணி குறித்து அவருக்குத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
நேற்றைய போராட்டத்தின் போது அரசாங்கம் நடந்துகொண்ட விதத்தை சர்வதேச சமூகம் மிகுந்த அவதானத்துடன் அவதானித்திருந்தது.