யாழ். சேந்தாங்குளம் கடற்கரையில் 60 கிலோ கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணம், சேந்தாங்குளம் கடற்கரையில் இருந்து 60 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
இன்று காலை இராணுவத்தினர் இதைக் கைப்பற்றியுள்ளனர்.
இந்தியாவில் இருந்து ஓர் இரகசியப் படகு வருகின்றது எனக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இராணுவத்தினர் சேந்தாங்குளம் கடற்கரையில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போதே மேற்படி 60 கிலோகிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.