13வது திருத்தம் தொடர்பில் இலங்கையை சமாளிக்க இந்திய மூத்த இராஜதந்திரியொருவர் நியமனம்?

மாகாண சபைகளை நிறுவுவதற்கு சட்டபூர்வமான அடிப்படையை வழங்கிய அரசியலமைப்பின் 13 வது திருத்தம் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தை சமாளிக்க இந்தியா ஒரு சிறப்பு தூதரை நியமிக்க தயாராகி வருவதாக புதுடில்லியில் உள்ள இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சின் சவுத் பிளாக் வளாகத்தில் உள்ள அதிகாரிகள் ஏற்கனவே விவாதங்களைத் தொடங்கியுள்ளதாக ‘தேசய’ செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
முன்னதாக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் பதவியை வகித்த மூத்த இராஜதந்திரி ஒருவர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.