திரையிசை உலகில் மிகவும் சிறிய வயதில் ஒரு அற்புதமான இடத்தை பிடித்தவர்.
தமிழ் திரையிசை உலகில் மிகவும் சிறிய வயதில் ஒரு அற்புதமான இடத்தை பிடித்தவர் ஸ்வர்ணலதா அவர்கள்.
1973ல் பிறந்த அவர் எதிர்பாராத காரணங்களால் தனது 37வது வயதில் மறைந்தது தமிழ் திரையிசை ரசிகர்களுக்கு ஒரு பெரிய இழப்பு.
SPB அவர்கள் மறைந்த நேரத்தில் எந்தளவுக்கு தமிழ் திரை ரசிகர்கள் துக்கத்தை அனுபவித்தார்களோ, அந்தளவுக்கு ஸ்வர்ணலதா அவர்கள் மறைவிற்கும் அனுபவித்தார்கள்.
இதற்கு எல்லாம் ஒரே காரணம் தான் – அவர்கள் உலகை விட்டு நீங்கினாலும் அவர்கள் பாடி இந்த உலகத்திற்கு தந்துவிட்டு சென்ற பாட்டுக்களை வினாடிக்கு ஒரு முறை பலர் கேட்டுக்கொண்டு இருக்கின்றனர்; பலர் பாடி பயிற்சி செய்துகொண்டு இருக்கின்றனர். ரசிகர்களின் மனங்களில் நீங்காத இடத்தை பிடித்தவர்கள் அவர்கள்.
01. ஸ்வர்ணலதா 22 வருடங்கள் மட்டுமே இசை உலகில் சஞ்சரித்து வந்தார். அந்த குறுகிய இடைவெளியில், அவர் 200க்கும் அதிகமான பாடல்களை இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பாடியுள்ளார்.
அதே நேரத்தில், அவருடைய குரல் வளத்தை இசைப்புயல் ரஹ்மான் அவர்களும் பயன்படுத்த தவறவில்லை. 1987ல் (அதாவது தனது 14 வயதில்) பாட ஆரம்பித்தவர், 10000க்கும் அதிகமான பாடல்களை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஒரியா, பெங்காலி, பஞ்சாபி மற்றும் உருது மொழிகளில் பாடியுள்ளார்.
02. கருத்தம்மா படத்தில் அவர் பாடிய “போறாளே பொன்னுத்தாயி” பாட்டிற்கு தேசிய விருது கிடைத்தது.
03. கேரளாவை பூர்விமாக கொண்டவர்.
04. சென்னைக்கு குடியேறி விஸ்வநாதன்
அவர்கள் இசையமைப்பில், நீதிக்கு தண்டனை என்ற படத்தில் “சின்னஞ்சிறு கிளியே” என்ற பாடல் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.
05 ரங்கீலா என்ற பிரபல ஹிந்தி படத்தில் பாடகர் ஹரிஹரன் அவர்களுடன் இணைந்து டூயட் பாடல் பாடியுள்ளார்.
06. தமிழ் திரையுலகிற்க்கு அதிகம் அவரை இனம் காட்டியதே “போவோமோ ஊர்கோலம்” என்ற சின்னத்தம்பி படத்தில் வரும் பாட்டு. இந்த பாட்டிற்கு அவருக்கு தமிழக அரசு விருது கிடைத்தது. சின்னத்தம்பி படத்தின் வெற்றிக்கு அவர் பாடல்களும் காரணம் என்று சொல்லலாம்.
07. அலைபாயுதே என்ற படத்தில் அவர் பாடிய “எவனோ ஒருவன்” என்ற பாட்டிற்கு தமிழக அரசு விருது கிடைத்தது.
08. தேசிய விருது மற்றும் தமிழக அரசு விருதுகள் தாண்டி, பல விருதுகள் அவர் பெற்றிருக்கிறார்.
09. காதலன் படத்தில் ரஹ்மான் இசையமைப்பில் அவர் பாடிய முகப்பலா பாட்டு அவரை இளம் வயதினருக்கு அறிமுகம் செய்தது.
10. ரஜனிகாந்த் நடித்த தளபதி படத்தில் வந்த ராக்கம்மா கையை தட்டு என்ற பாட்டு – BBC நடத்திய முதல் பத்து பாடல்கள் வரிசையில் இடம் பிடித்தது.
11. சின்னத்தம்பி படத்தில் அவர் பாடியே “நீ எங்கே என் அன்பே” என்ற பாடல் மனதை உருக்கும்.
12. இவருடைய “ஆரோட்டமா தேரோட்டமா” என்ற பாடல் ஈஸ்வரி அம்மா அவர்களுடைய குரலுக்கு சவால் விட்டது போல இருக்கும். அதாவது துள்ளவைக்கும்.