காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பல நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர்- கலைப்பீட மாணவர் ஒன்றிய ம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நாளாந்தம் உளவியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பல்வேறான நெருக்கடிகளை எதிர்கொள்வதாக யாழ்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் பா.உயாந்தன் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
யுத்தம் முடிவடைந்து 11 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உரியவர்களிடம் கையளிக்கப்படவில்லை. இன்னமும் உறவுகளை தேடிக் கொண்டே இருக்கின்றோம்.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை இடம்பெறவேண்டும். அநீதி இழைத்தவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தப்பட வேண்டும்.
பெற்ற பிள்ளைகளை, உடன்பிறப்புக்களை, கணவனை, பேரப்பிள்ளைகளை, உறவுகளை தேடி நீதிக்காக தாய்மார்கள் வீதியில் போராடுவதை பார்க்கின்ற போது கவலையாக உள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நாளாந்தம் உளவியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பல நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர். இந்த விடயங்களில் நாம் கரிசனை செலுத்தவேண்டும், என்றார்.