வைத்யசாலையில் பலியான பெண் தொடர்பான விசாரணை ஆரம்பம்
யாழ் போதனா வைத்தியசாலயைில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபடும் பெண் ஊழியர் ஒருவர் நான்காம் மாடிக் கட்டடத்திலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
அந்த ஊழியர் தவறி வீழ்ந்தாரா அல்லது தற்கொலை செய்தாரா என்று விசாரணைகளின் பின்னரே தெரியவரும் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
பளையைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் பணியாளரே நேற்றைய தினம் நான்காம் மாடியில் இருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 17ம் நோயாளர் விடுதியிலிருந்தே அந்தப் பெண் நிலத்தில் வீழ்ந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.