இந்தியாவில் இருந்து வந்த இருவருக்கு கொரோனா வைரஸ்.

இந்தியாவில் இருந்து வந்த இருவர் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாக்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3012 ஆக அதிகரித்துள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,860 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், 140 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் 12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது