அரையிறுதிக்குள் நுழைகிறது பாகிஸ்தான்.
20 ஓவர் உலக கோப்பை போட்டியில் குரூப்-1 பிரிவில் இருந்து நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன. குரூப்-2 பிரிவில் இருந்து இந்தியா தகுதி பெற்றுவிட்டது.
குரூப்-2 பிரிவில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான்- வங்காளதேசம் அணிகள் மோதிய போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 9.30 மணிக்கு அடிலெய்ட் டில் தொடங்கியது. இப்போட்டியில் வெற்றி பெறுபவர் அரை இறுதிக்கு தகுதி பெறலாம் என்ற சூழலில் இரு அணிகளும் களம் இறங்கின.
டாஸ் ஜெயித்த வங்காள தேச கேப்டன் ஷகிப்-அல்-ஹசன் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக லிட்டன் தாஸ், நஜ்முல் ஹாசைன் சாந்டோ களம் இறங்கினர். லிட்டன் தாஸ் 10 ரன்னில் ஷகின்ஷா அப்ரிடி பந்தில் ஆட்டமிழந்தார்.
சிறப்பாக விளையாடிய நஜ்முல் ஹாசைன் அரை சதம் அடித்ததும் அவுட் ஆனார். அவரது விக்கெட்டை இப்திகார் முகம்மது கைப்பற்றினார். இந்த ஆட்டத்தின் முடிவில் வங்காளதேச அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்தது. 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது.
இந்நிலையில், விறுவிறுப்பாக விளையாடிய பாகிஸ்தான் அணி 18.1 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணி அபாரமாக வெற்றிப்பெற்றுள்ளது.
இதன்மூலம், நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியாவை தொடர்ந்து பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதிப்பெற்றுள்ளது.