கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணி ஆரம்பம்!

கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் சிரமதானப் பணி இன்று பணிக் குழுவினரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இன்று காலை 8 மணியளவில் மாவீரர்களுக்குச் சுடரேற்றி மலர் தூவி அக வணக்கம் செலுத்தி சிரமதானப் பணி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்தச் சிரமதானப் பணியில் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் தங்களுடைய குழந்தைகளின் வித்துடல்களை விதைத்த பெற்றோர், உறவுகள், தமிழீழ விடுதலைப்புலிகள் காலத்தில் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் முதன்மைச் செயற்பாட்டாளர் தியாகு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுரேன், சமூகச் செயற்பாட்டாளர்கள், அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.