பஸ்ஸில் இருந்து தவறி விழுந்த தாதிய உத்தியோகத்தர் மரணம்.
பஸ்ஸில் இருந்து தவறி விழுந்த தாதிய உத்தியோகத்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தராகக் கடமையாற்றும் கொடிகாமம், மீசாலை பகுதியைச் சேர்ந்த குகதாசன் விமல்ராஜ் என்ற தாதிய உத்தியோகத்தரே உயிரிழந்தார்.
திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த பஸ் பளைப் பகுதியில் வீதியின் நடுவே நின்ற மாட்டைக் காப்பாற்ற முற்பட்ட வேளையில் குறித்த தாதிய உத்தியோகத்தர் பஸ்ஸில் இருந்து தவறி வீதியில் விழுந்து படுகாயமடைந்திருந்தார்.
பின்னர் குறித்த உத்தியோகத்தர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு மரணமடைந்தார்.