சீனாவின் கடுமையான எதிர்ப்பையும் மீறி இந்தியப் போர்க் கப்பல் தென் சீனக் கடலில் ரோந்து.
தென் சீனக் கடல் பகுதிக்கு சீனா முழு உரிமை கோரி வரும் நிலையில் அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே அங்கு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அமெரிக்கக் கப்பல்களுடன் சேர்ந்து இந்திய போர்க்கப்பலும் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன வீரர்களுக்கு இடையே நடந்த மோதலைத் தொடர்ந்து இந்தக் கப்பலை இந்தியா அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவ்வப்போது நடக்கும் பேச்சுவார்த்தையின்போது, இந்தியாவின் நடவடிக்கைக்கு சீனா கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இதேபோல் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகிலுள்ள மலாக்கா ஜலசந்தியில் இந்திய கடற்படை தனது முன்னணி கப்பல்களையும் நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.