ஆஸ்திரேலிய பெண்ணை பலமுறை தாக்கிய தனுஷ்க! குற்றச்சாட்டுகள் தீவிரமானவை! ஆஸ்திரேலிய காவல்துறை அறிக்கை!
பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் சிட்னியில் போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனுஷ்க குணதிலகவை சந்திக்க , சில நாட்களுக்கு முன்னர் குறித்த இளம் பெண் சென்றதாக , தன்னிடம் கூறியதாகவும், அவளை சந்திக்க வந்தவரை , மக்கள் நடமாட்டமுள்ள பொது இடமொன்றில் அவர் சந்தித்ததாகவும் , குறித்த இளம் பெண் தெரிவித்துள்ளதாக சிட்னி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
31 வயதான சர்வதேச கிரிக்கெட் வீரர், கடந்த புதன்கிழமை மாலை இளம் பெண்ணை நேரில் சந்திப்பதற்கு முன்பு, தொடர்புடைய ஆப் மற்றும் உரையாடல்கள் மற்றும் வீடியோ மூலம் பல நாட்களாக தொடர்ந்து அரட்டை அடித்தது தெரியவந்துள்ளது.
“இருவரும் சிட்னியில் முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்ட ஓரிடத்தில் சந்தித்ததோடு, அங்கு அவர்கள் குடித்துவிட்டு இளம் பெண்ணின் வீட்டிற்குச் செல்வதற்கு முன்பு சாப்பிட வெளியே சென்றுள்ளனர். பின்னர், அவர்கள் இருவரும் அவளது வீட்டில் இருந்தபோது, அந்த இளம் பெண்ணை தனுஷ்க பலமுறை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கூறப்படும் தாக்குதல் பல மணித்தியாலங்களுக்கு மேலாக இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது.
சிட்னி காவல்துறையின் பாலியல் குற்றப்பிரிவு கமாண்டர், டிடெக்டிவ் கான்ஸ்டபிள் ஜேன் டோஹெர்டி செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்த விவகாரத்தில் தொடர்புடைய இளம் பெண், தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.
தனுஷ்க குணதிலக்கவுக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளதுடன், அவர் நாளை வேவர்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். டோஹெர்டி கூறுகையில், போலீஸ் தொடர்ந்து ஜாமீன் பெறுவதை மறுக்க விரும்புகிறது. பாலியல் வன்கொடுமை மிகவும் கடுமையான குற்றம் என்று டோஹெர்டி கூறுகிறார்.
“பாலியல் வன்முறை எவ்வளவு தீவிரமானது என்பதை நீதிமன்றம் புரிந்து கொண்டுள்ளது. எங்களிடம் அதற்கான ஒப்புதல் சட்டங்கள் உள்ளன, அவை எப்போதும் ஒரு நபரின் விருப்பமாக இருக்க வேண்டும் என்பதைக் காட்டுவதோடு , அவர்கள் பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யும் உரிமை குறித்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் சட்டமாக்கப்பட்டன என்கிறார் டோஹெர்டி .
“இதுபோன்ற விடயங்களை வெளிக் கொண்டுவருவதற்கு அதிக முயற்சி தேவை என்பதை நாங்கள் அறிவோம். மக்கள் , முன் வந்து தங்கள் கதைகளைச் சொல்ல மிகவும் அச்சப்படுகிறார்கள். ஆனால் அது அப்படித்தான் தொடங்குகிறது” என இந்த விடயத்தை புலனாய்வு செய்யும் ஜேன் டோஹெர்டி மேலும் தெரிவித்துள்ளார்.