என்ன எல்லாமே சரியான மிக்சர் பைத்தியங்களா இருக்காங்களே..
பிக் பாஸ் வீட்டில் இருந்து கொண்டு நோகாம நொங்கு திங்கிறது, மிக்சர் பார்ட்டி என போட்டியாளர்களுக்கு ரசிகர்கள் பெயர்களை வைத்து ட்ரோல் செய்வது வழக்கம். இந்த முறை அந்த ட்ரோல்களை டைரக்ட்டாக கமல்ஹாசனே நிகழ்ச்சியில் செய்வது நல்ல சுவாரஸ்யத்தை கொடுத்து வருகிறது.
4வது மற்றும் 5வது சீசனில் இருந்ததை போல இல்லாமல் சும்மா ரவுண்டு கட்டி விளையாடி வருகிறார் கமல்ஹாசன். போட்டியாளர்களின் கேமை விட ஹோஸ்ட்டின் கேம் சிறப்பு.
யாரு இந்த வீட்டில் சரியான மிக்சர் தின்னி என்பதை கண்டு பிடிக்க ஸ்டோர் ரூமில் இருந்து மிக்சரை எடுத்து வர சொன்னார். அதை பார்த்ததுமே பிரியாணி என நினைத்து ஹவுஸ்மேட்கள் கூச்சலிட, பொறுங்க இது வெறும் மிக்சர் தான் என பல்பு கொடுத்தார். ஆனால், அதையே கடைசியில் அடித்துப் பிடித்துக் கொண்டு ஹவுஸ்மேட்கள் தின்பதை பார்த்து கமலே ஒரு நிமிஷம் ஆடிப்போய்விட்டார்.
சிங்கப்பூரில் இருந்து இவ்வளவு தூரம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த நிவாஷினி அசல் கோலார் இருந்த வரை ஏகப்பட்ட கன்டென்ட்டுகள் கொடுத்து வந்தார். ஆனால், அசல் போன பிறகு அமைதியாகி விட்டார் என நிவாஷினிக்கு ஹவுஸ்மேட்டில் பலரும் மிக்சர் கொடுத்து அசிங்கப்படுத்தினர். அந்த டாஸ்க் முடிந்த பிறகு அசீம் கொடுத்த லெக்சர் தான் அப்பாடா ஆளவிடுடா சாமி என்கிற ரேஞ்சுக்கு இருந்தது.
மகேஸ்வரி நிவாவுக்கு மிக்சர் கொடுக்கும் போது, நான் ஒரு விஷயம் சொல்ல கூப்பிட்டேன். பாத்ரூம் வருதுன்னு போயிட்டார் என பேசினார். உடனடியாக எழுந்து பேசிய நிவா பாத்ரூம் வந்தா கூட போகக் கூடாதா? அது இயற்கை என அதிரடியாக பேசி மகேஸ்வரியின் மூக்கை உடைத்து விட்டார். இப்படியே தைரியமாக பேசினால் அடுத்த வாரம் நிவாவிடம் இருந்து பெரிய சண்டையையே எதிர்பார்க்கலாம்.
கதிரவனுக்கு அதிகம் மிக்சர் வரும் என நினைத்தேன் என வெளிப்படையாகவே பேசி இந்த வாரம் கதிரவனையே வெளியே அனுப்பி இருக்கலாம். விளையாட்டில் ஸ்ட்ராட்டஜியை பயன்படுத்திய ஷெரினாவை அனுப்பிவிட்டார்கள் ரசிகர்கள் என ரொம்பவே ஃபீல் செய்து விட்டார்.
தனக்கு கண்ணில் கட்டி வந்து விட்டது. ஏகப்பட்ட மாத்திரை எடுக்கிறேன் என ஒரேயடியாக பிக் பாஸ் வீட்டுக்கு வந்து சம்பளம் வாங்கிக் கொண்டு வெளியே பிஆருக்கு பணத்தை கொடுத்து விட்டு தூங்கும் மிக்சர் ராமையும் தட்டி எழுப்பிய கமல் உங்களுக்கு தூக்க மாத்திரையே கொடுக்கல் என பங்கமாக கலாய்த்து விட்டார்.
நிவாஷினி, ஷெரினா, ஜனனி உள்ளிட்ட போட்டியாளர்களுக்கு அதிகம் மிக்சர் கிடைத்த நிலையில், கடைசியாக பவுலில் இருந்த மீதமுள்ள மிக்சர்களுக்கு ஹவுஸ்மேட்கள் அடித்துக் கொண்டதை பார்த்து கமலே கடுப்பாகி விட்டார். இவங்க எல்லாருமே மிக்சர் பார்ட்டி தான் போல என கிண்டலடித்து விட்டு கிளம்பினார்.