எலிமினேஷன் கார்டில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய கமல்!
நடிகர் கமல்ஹாசன் நேற்றைய பிக் பாஸ் ஷோவில் முன் எப்போதும் இல்லாத வகையில் போட்டியாளர்களை எச்சரித்து இருக்கிறார்.
எல்லோரும் வீட்டில் சகஜமாக இருக்கிறார்கள், விதிகளை மதிப்பதில்லை, நேரத்திற்கு வருவதில்லை, வேறு மொழிகளில் பேசுகிறார்கள், எழுதி காட்டுகிறார்கள் என பல்வேறு குற்றச்சாட்டுகளை சொன்ன கமல், ‘நானே ரெட் கார்டு கொடுத்து வெளியில் அனுப்பிவிடுவேன்’ என எச்சரித்து இருக்கிறார்.
இந்நிலையில் ஷெரினா எலிமினேட் செய்யப்பட்டு இருக்கிறார். அவர் வீட்டில் தமிழில் பேசாமல் எப்போதும் ஆயிஷா உள்ளிட்ட போட்டியாளர்களிடம் மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பேசி வந்தார். கமல் பல முறை வார்னிங் கொடுத்தும் அது தொடர்ந்தது.
ஷெரினா வெளியேறுகிறார் என கமல் கார்டை காட்டி தான் அறிவித்து இருக்கிறர். ஆனால் அந்த கார்டு மலையாளத்தில் இருப்பது பலருக்கும் ஆச்சர்யம் கொடுத்திருக்கிறது.
தொடர்ந்து மலையாளத்தில் பேசியதால் தான் ஷெரினா எலிமினேட் ஆகிறார் என காட்டத்தான் இப்படி செய்திருக்கிறார் கமல்.