எதிரணியிலிருந்து 13 எம்.பிக்கள் அரசு பக்கம் ‘பல்டி’?
ஐக்கிய மக்கள் சக்தி உட்பட எதிரணி பக்கம் உள்ள 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசுடன் இணையவுள்ளனர் என்று நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
சர்வகட்சி அரசு அமைப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்காகவே இவர்கள் ‘பல்டி’ அடிக்கின்றனர் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்களில் சிலருக்கு அமைச்சுப் பதவியும் வழங்கப்படவுள்ளது. வரவு – செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்ட பின்னர், அதற்கு ஆதரவு என்ற போர்வையில் தாவலை அரங்கேற்றுவதற்கான ஏற்பாடுகள் வெற்றியளித்துள்ளன எனத் தெரியவருகின்றது.
அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் ஆளுங்கட்சி பக்கம் செல்லமாட்டார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அறிவித்துள்ளார்.