முல்லைத்தீவில் ஐஸ் மழை புயல் காற்றால் 15 ற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்.
30.08.2020 நேற்று மாலை 3.00 மணியளவில் முள்ளிவாய்க்கால் மேற்கு மற்று கிழக்கு பகதிகளில் மழையுடன் கூடிய புயல் காற்று வீசியுள்ளதுடன் ஜஸ் கட்டிகளும் கொட்டியுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள். இதனால் மக்களின் 15வீடுகள் சேதமடைந்துள்ளன.
முள்ளிவாய்க்கால் மேற்கில் தற்காலிக வீடு ஒன்று முற்றுமுழுதாக காற்றினால் சேதமடைந்துள்ளது.ஏனைய வீடுகளின் கூரை ஓடுகள் காற்றினால் தூக்கிவீசப்பட்டுள்ளதுடன் மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளன. வீட்டின் முன்னால் போடப்பட்டிருந்த தகர கொட்டகைகள் தூக்கி வீசப்பட்டும் சேதமாக்கப்பட்டு உள்ளன.
ஜஸ் மழைபெய்தால் மக்களின் வீடுகளின் கூரைகள் பல சேதமடைந்துள்ளன.ஒடுகளிலம் சீற்களிலும் தகரங்களிலும் பாரிய சத்தத்துடன் ஜக்கட்டிகள் வீழ்ந்துள்ளதால் கூரைகள் சேதமடைந்துள்ளன.
சில வீடுகளில் நின்ற வேப்பமரக்கிளைகள் முறிந்து வீசப்பட்டுள்ளதுடன் சுழற்றி வீசிய காற்றினால் வேலிகள் பல சாய்ந்துள்ளன.
முள்ளிவாய்க்கால் பகுதியில் நிலைகொண்டுள்ள படையிரின் முகாம் வேலியில் அடைக்கப்பட்ட தகரங்கள் காற்றினாhல் புடுங்கி வீசப்பட்டுள்ளன.மக்களின் சேத விபரங்கள் தொடர்பில் சம்பவ இடத்திற்கு சென்ற முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினர் விபரங்களை திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.
முழுமையான விபரங்கள் 31.08.2020 இன்றும் திரட்டப்பட்ட பின்னர் பாதிக்கப்பட்ட வீடுகள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்கள்.