பாஸ்போர்ட் பெறவுள்ள மக்களுக்கான விசேட அறிவிப்பு!

கடவுச்சீட்டுகளை பெறவுள்ள மக்களுக்காக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பத்தரமுல்ல தலைமை அலுவலகம் உட்பட அனைத்து பிராந்திய அலுவலகங்களிலும் வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணினி அமைப்பில் ஏற்பட்ட பிழை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.