இரு மாணவர்களுக்கிடையில் மோதல் : 13 வயது மாணவன் பரிதாபமாக பலி!

இலங்கையின் அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலயத்தில் 8 ம் ஆண்டில் கல்வி கற்கும் 13 வயதுடைய இரு மாணவர்களுக்கிடையே பாடசாலையில் ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவன் வாயால் நுரை வெளிவந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை பகல் 1.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதாகவும் மற்றைய மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்.
தம்பிலுவில் ஏ.பி.சி வீதியைச் சேர்ந்த 13 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதுபற்றி தெரியவருவதாவது குறித்த பாடசாலையில் ஒரே வகுப்பில் இருமாணவர்களும் கல்விகற்றுவருகின்றனர்.
இந்த நிலையில் சம்பவதினமான இன்று பிற்பகல் பாடசாலை முடிவடைகின்ற நேரத்தில் உயிரிழந்த மாணவன் வகுப்பறை மேசையில் பெயின்றால் கீறிய நிலையில் சக மாணவன் அந்த பெயின்றில் கையில் பட்டு அழிந்ததையடுத்து என்ன பைத்தியகார வேலை என உயிரிழந்த மாணவனை பார்த்து ஏசியுள்ளான்.
இதனையடுத்து பைத்தியகாரன் என தெரிவித்த மாணவனை மேசையின் கீழ்வைத்து உயிரிழந்த மாணவன் தாக்கியுள்ளதையடுத்து அந்த மாணவன் அவனை திருப்பி குனியவைத்து கொக்ககோல வெறும் பிளாஸ்ரிக் தண்ணீர் போத்தலால் அவன் மீது தாக்கியதையடுத்து அவன் இரு மேசைக்களுக்கிடையே குப்புற வாயால் நுரைகக்க வீழ்ந்துள்தையடுத்து அவனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்துள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதில் சக மாணவனை தாக்கிய மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இருவரும் ஒரே பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் உயிரிழந்த மாணவனின் சடலத்தை பிரேத பரிசோதனைக்குட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுவருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர் இதேவேளை அந்தபகுதி மக்கள் வைத்தியசாலையில் திரண்டுள்ளதுடன் அந்தபகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.