எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 13 பேர் அரசாங்கத்துடன் இணையத் தயார்?

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் பல அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரவு செலவுத் திட்ட தினத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் 13 உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாக இந்த அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாகவும், இணையும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படவுள்ள அமைச்சுப் பதவிகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.