நவம்பர் 18இல் வடக்குக்கு வருகின்றார் ஜனாதிபதி ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 18ஆம் திகதி வடக்கு மாகாணத்துக்கு வரவுள்ளார் என்று அறியமுடிகின்றது.
18ஆம் திகதி வடக்குக்கு வரும் ரணில் விக்கிரமசிங்க வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களுக்குச் செல்வார் என்று தெரிகின்றது.
அவர் அங்கு ஒருக்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் பங்குகொள்வார் என்றும், நிலைமைகளை ஆராய்வார் என்றும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.