தமிழ் மொழியால் தமிழர்களுக்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே பெருமை : அமித்ஷா பேச்சு
தமிழ் மொழியின் பெருமை தமிழர்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் பெருமை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னையில் பேசியுள்ளார்.
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75 வது ஆண்டு பவள விழாவில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கிரிக்கெட் வீரர் தோனி, ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் தங்கம் தென்னரசு, ஓ.பன்னீர்செல்வம் , மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ் உலகின் மிக மூத்த, பழைமையான மொழி என்றும் தமிழ் மொழியின் பெருமை தமிழர்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் பெறுமை என கூறினார்.
தமிழில் மருத்துவக்கல்வி, பொறியியல் கல்வியை அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என பேசிய அமித்ஷா தமிழில் உரிய பாடத்திட்டங்களை அமைக்குமாறு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன் என்றார். மருத்துவம் பொறியியல் படிப்பு ஆங்கிலத்தில் இருப்பதால் அரசு பள்ளி மாணவர்கள் சிரமப்படுகின்றனர் .
இதனால் தாய்மொழியில் உயர்கல்வி படிப்புகளை ஏற்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டுகொண்டுள்ளார். தமிழகம் மீது பிரதமர் மோடி தனி கவனம் செலுத்தி வருவதாகவும், தமிழகத்தின் வளர்ச்சியை கூர்ந்து பிரதமர் மோடி கவனிக்கிறார் என அமித் ஷா பேசினார்.