அஜித் டோவலைச் சந்தித்த மிலிந்த மொரகொட!

இந்தியாவுக்கான இலங்கையின் தூதுவர் மிலிந்த மொரகொட இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலைப் புதுடில்லியில் நேற்று சந்தித்துள்ளார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளின் தற்போதைய நிலை தொடர்பில் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது எனத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளின் பரஸ்பர நலன்கள் மற்றும் எதிர்கால ஒத்துழைப்பின் போது முன்னுரிமையளிக்கப்படும் விடயங்கள் உள்ளிட்டவை இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.