உலக கோப்பை இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு காரணம் இதுதான்…
எட்டாவது டி20 உலககோப்பை தொடரின் இறுதிப்போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து- பாகிஸ்தான் அணியை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது
19 ஓவர்கள் முடிவில் இலக்கை கடந்த இங்கிலாந்து அணி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதனால் டி20 உலக கோப்பை வரலாற்றில் இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது.
இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவிய பிறகு பேட்டியளித்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், தோல்விக்கு காரணம் என்னவென்று கூறினார்.
“சாம்பியன் பட்டத்தை வென்ற இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள். அவர்கள் தகுதியான அணிதான். இன்றைய போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடினார்கள்.
பேட்டிங்கில் நாங்கள் 20 ரன்கள் குறைவாக அடித்துவிட்டோம். முதல் இரண்டு போட்டியில் தோல்வியை தழுவிய பிறகு, அடுத்த நான்கு போட்டிகளில் நாங்கள் விளையாடிய விதம் மிகவும் திருப்திகரமாக இருந்தது.
எங்களது இயல்பான ஆட்டத்தையே நாங்கள் வெளிப்படுத்தினோம்.
உலகின் மிகச் சிறந்த பவுலர்களை நாங்கள் அணியில் வைத்திருக்கிறோம். துரதிஷ்டவசமாக சாகின் அப்ரிடி காயம் அடைந்தது எங்களுக்கு பின்னடைவை கொடுத்திருக்கிறது. ஆனால் வீரர்களுக்கு காயம் என்பது விளையாட்டில் இயல்பான ஒன்று. விரைவில் குணமடைந்து வருவார் என்று எதிர்பார்க்கிறேன்.” என பேசினார்.