குழந்தை பிறக்கவே கூடாது.. பெண்கள் பிரசவிக்க தடை விதித்த கிராமம்.. 400 ஆண்டுகால நம்பிக்கை!
மத்திய பிரதேசத்தில் ஒரு கிராமத்தில் குழந்தைகள் பிறந்து 400 ஆண்டுகள் ஆகிறது. உள்ளூர்வாசிகள் தங்கள் கிராமம் “சபிக்கப்பட்டதாக” நம்புகிறார்கள். ஒரு பெண் இங்கு குழந்தையைப் பெற்றெடுத்தால், குழந்தை அல்லது தாயார் இறந்துவிடுவார்கள் என்று நம்பப்படுகிறது.
மத்தியபிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் இருந்து 130 கிமீ தொலைவில் உள்ள ராஜ்கரில் உள்ள சங்க ஷ்யாம் ஜி கிராமத்தில் எழுத்துப்பூர்வ விதிகள் எதுவும் இல்லை.ஆனால் இங்கு பெண்களுக்கு பிரசவம் செய்ய அனுமதி இல்லை.
தங்களது உயிர் மற்றும் தங்கள் குழந்தையின் நல்வாழ்வை விரும்பினால் அவர்கள் கிராமத்தை கடந்து வெளியில் பிரசவம் செய்ய வேண்டும் என்று உள்ளூர்வாசிகள் நம்புகிறார்கள்.
16 ஆம் நூற்றாண்டில் இந்த கிராமத்தில் கோயில் கட்டப்பட்டபோது, ஒரு பெண் கோதுமை அரைக்கத் தொடங்கியுள்ளார். அந்த சத்தம் கட்டுமானப் பணிகளை பாதித்ததாகவும் அதனால் கோபமடைந்த, கடவுள்கள் கிராமத்தை சபித்தார், இந்த கிராமத்தில் எந்த பெண்ணும் பிரசவம் செய்ய முடியாது என்று கூறினார் என்று அந்த ஊர் பெரியவர்கள் கூறுகின்றனர்.
கோவில் கட்டும் பணியை ஒரு பெண் சீர்குலைத்ததால் இந்த கிராமத்தின் மீதும் இங்கு வசிக்கும் பெண்களின் மீதும் சாபம் ஏற்பட்டதாக இந்த ஊர் மக்கள் நம்புகின்றனர். இதனால் இந்த ஊரில் பிரசவங்கள் ஏதும் நடப்பதில்லை.
சில தற்செயலான பிரசவங்கள் நடந்தபோது, குழந்தை சிதைந்துவிட்டது அல்லது இறந்துள்ளது. இந்த சம்பவங்களுக்கு பின் இது மூடநம்பிக்கை என்ற பேச்சுக்களை கிராம மக்கள் ஒதுக்கித் தள்ளினார்கள். நிலைமையின் சீவிய நிலையை சமாளிக்க, கிராம மக்கள் குழந்தைப் பிரசவத்திற்காக கிராமத்திற்கு வெளியே ஒரு அறையைக் கட்டினர்.
சங்க ஷ்யாம் ஜி கிராமத்தைச் சேர்ந்த, நரேந்திர குர்ஜார் கூறுகையில், 90 சதவீத பிரசவங்கள் கிராமத்திற்கு வெளியே மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன. அவசர காலங்களில் கூட, கிராமத்திற்கு வெளியே தான் பிரசவங்கள் நடக்கின்றன. அங்கு இதற்காக ஒரு தனி அறை கட்டப்பட்டுள்ளது. கடுமையான வெயில் காலங்களில் கூட, குழந்தை பிறப்புக்காக பெண்கள் கிராமத்திற்கு வெளியே அழைத்துச் செல்லப்படுகிறார்கள், என்றார்.
கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கூறுகையில், இந்த கிராமத்தில் யாரும் மது அருந்துவதும், இறைச்சி சாப்பிடுவதும் இல்லை, அதுவே தங்கள் கிராமத்திற்கு கடவுள் கொடுத்த வரம் என்கிறார்