கோட்டாபய அமெரிக்கா செல்ல கையாள முயன்றுள்ள புதிய உத்தி
அமெரிக்காவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாக தம்மை நியமிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்கா செல்வதில் தற்போது அவர் எதிர்கொள்ளும் தடைகளை சமாளிப்பதும் அதன் நோக்கங்களில் ஒன்றாகும்.
ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதுவித முடிவையும் சொல்லவில்லை என தெரியவருகிறது.
முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் தற்போது ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாக செயற்பட்டு வருகின்றார்.