விசமிகளால் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் தீ வைப்பு.

வவுனியாவில் தீப்பற்றியேறிந்த முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கில் பொலிஸார் தீவிர விசாரணை
வவுனியா பண்டாரிக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாடசாமி ஆயலயத்திற்கு அருகே அமைந்துள்ள வீடொன்றில் முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிலும் தீப்பற்றியேறிந்து முற்றாக சேதமடைந்துள்ளது.
இன்று (31.08.2020) அதிகாலை 3.00 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த வீட்டிருந்தில் அனைவரும் உறங்கிய சமயத்தில் காலை 3.00 மணியளில் வீட்டு முற்றத்தில் நின்ற முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிலும் திடீரேன தீப்பறியேறிந்துள்ளது. வாகனங்கள் தீப்பற்றியதினை கண்ணுற்ற வீட்டார்கள் உடனடியாக தண்ணீர் ஊற்றி அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
எனினும் முச்சக்கரவண்டி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன் மோட்டார் சைக்கில் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் தீ விபத்திற்கான காரணம் தொடர்பில் ஆராய்ந்தது வருகின்றனர்.