மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக கே.கருணாகரன் நியமனம்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக இலங்கை நிர்வாக சேவை விசேட தரத்தை சேர்ந்தவரும் , தற்போதைய கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி மற்றும் காணி அமைச்சின் செயலாளராக கடமையாற்றும் கே. கருணாகரன் நியமனம் பெற்றுள்ளார்.
இன்று பிற்பகல் இதற்கான அமைச்சரவை நியமன கடிதத்தினை பெற்றுக் கொண்டுள்ளார்.
அரச அதிபராக கடமையாற்றிய திருமதி. கலாமதி பத்மராஜா, பொது நிர்வாக , மாகாண சபைகள் ,உள்ளூராட்சி அமைச்சிற்கு உடனடியாக அமுலாகும் வரையில் இடமாற்றம் செய்யப்பட்டு இணைக்கப்பட்டுள்ளார்.
- Sathasivam Nirojan